Posts

வசந்தன் வந்தாச்சு

Image
ராவணனை ராமன் வென்றதும், வானரப்படைகள் இலங்கையிலிருந்து புறப்படத் தயாராயினர். படைவீரர்கள் எல்லாரும் இருக்கிறார்களா என்று சரி பார்க்கும்படி சேனாதிபதியிடம் ராமர் உத்தரவிட்டார். ஒரு வானரம் மட்டும் காணாமல் போயிருப்பது தெரிந்தது. “சுவாமி.... வசந்தன் என்னும் வானரம் மட்டும் எங்கு சென்றது என்று தெரியவில்லை” என்றார் சேனாதிபதி. ஆஞ்சநேயரை அழைத்த ராமர், “காணாமல் போன வசந்தனைக் கண்டுபிடிப்பது உன் பொறுப்பு” என்றார். ஆஞ்சநேயர் எங்கு தேடியும் வசந்தன் தென்படவில்லை. இறுதியாக எமலோகத்தில் வசந்தன் இருப்பது தெரிய வந்தது. எமலோகம் சென்ற ஆஞ்சநேயர், “எமதர்மா... வசந்தன் எப்படி இங்கு வந்தான்?” என்று கேட்டார்.  எமதர்மன் பணிவுடன், “சுவாமி... கோபம் கொள்ளாதீர்கள். பூலோகத்தில் உள்ள அனைவரும் உமது புகழைக் கேட்டு மகிழ்கிறார்கள். அதைக் கேட்கும் ஆசை எனக்கும் வந்தது. நான் பூலோகம் வந்தால், என் பார்வை பலத்தால் பலரும் எமலோகம் வர வேண்டிய சூழல் உண்டாகி விடும். அதனால் வசந்தனை மட்டும் வரவழைத்து, உமது அருமை பெருமையைக் கேட்டு மகிழ்ந்தேன்,” என்ற எமன் அவனை விடுவித்தான். ஆஞ்சநேயர் வசந்தனுடன் பூலோகம் வந்து சேர்ந்த

இசை கேட்டால்

Image
தும்புருவும், நாரதரும் வீணை இசைப்பதில் வல்லவர்கள். இருவருக்கும் தாங்களே இசையில் வல்லவர்கள் என்ற கர்வம் இருந்தது. அவர்கள் ஒருமுறை இசையில் சிறந்த ஆஞ்சநேயரிடம் தீர்ப்பு கேட்க வந்தனர். தங்கள் வீணையை அருகில் இருந்த பாறையில் வைத்தனர். அவர்களது பிரச்னையை தெரிந்து கொண்ட ஆஞ்சநேயர் தோடி ராகத்தில் பாடினார். பாடல் கேட்டு வீணைகள் இருந்த பாறை உருக ஆரம்பித்தது. வீணைகள் இறுக ஒட்டிக் கொண்டன. அவற்றை எடுக்க முடியாமல் நாரதரும், தும்புருவும் திகைத்தனர்.  ஆஞ்சநேயர் கண்மூடி பாடிக்கொண்டிருந்தார். அவர் விழிக்கட்டும் என காத்திருந்த போது, ஆஞ்சநேயர் மற்றொரு பாடல் பாடினார். சிறிது நேரத்தில், பாறை இளகத் தொடங்கியது. வீணைகள் நெகிழ்ந்து வெளிவந்தன.  நாரதர் ஆஞ்சநேயரிடம், “அனுமனே! உன் இசைக்கு கல்லும் கரைகிறதே.... நீ பாடும் இந்த ராகத்தைக் கேட்க நாங்கள் என்ன பாக்கியம் செய்தோம்” என்றார். 'ஹனுமத் தோடி' என்னும் இந்த ராகம் பற்றிய வரலாறு, அருணாசல கவிராயர் பாடிய ராம நாடக கீர்த்தனையில் இடம் பெற்றுள்ளது.

யார் இந்த மாளிகைப்புறத்தம்மன்?

Image
ஐயப்பன் சன்னிதியை அடுத்து மாளிகைப்புறத்தம்மன் எனப்படும் மஞ்சமாதா சன்னிதி உள்ளது. இவளது கதை தெரியுமா? தத்தாத்ரேயர் என்ற மகான் சிவன், திருமால், பிரம்மா ஆகியோரின் அம்சமாக பூமியில் பிறந்தவர். அவருக்கும் மூன்று தேவிகளான பார்வதி, லட்சுமி, சரஸ்வதியின் அம்சமான லீலா என்பவளுக்கும் திருமணம் நடந்தது. இவள் காலவ முனிவரின் மகளாக பிறந்தவள். லீலாவுக்கு பணம், பகட்டு, இல்லற வாழ்வு ஆகியவற்றின் மீது தீராத ஆசை. தத்தாத்ரேயரோ ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டார். ஒருநாள் இருவருக்கும் கடும் பிரச்னை ஏற்பட்டது. ''உங்கள் மகிஷியான (மனைவி) என் கருத்தை ஏற்க மறுக்கிறீர்களே!'' என லீலா கோபத்துடன் சொன்னாள். உடனே தத்தர், ''உன்னை நீயே மகிஷி என்று சொல்லிக் கொண்டதால், நீ மகிஷியாகவே (எருமைத்தலை கொண்டவள்) பிறப்பாய். கோபம், காமம் ஆகிய குணங்களைக் கொண்ட நீ அரக்கியாகத் திரிவாய்,'' என சாபமிட்டார். பதிலுக்கு லீலா, ''நான் எருமையாகப் பிறந்தால், நீங்களும் அப்படித்தான் பிறப்பீர்கள்,'' என்றாள். சாபத்தின் பலனாக அவள் கரம்பன் என்பவளின் மகளாகவும், மகிஷாசுரன் என்பவன

கடமை... அது கடமை

Image
மகாபாரத யுத்தம் நடந்து கொண்டிருந்தது. கிருஷ்ணர் அர்ஜுனனின் தேருக்கு சாரதியாக இருந்து வழி நடத்தினார். மாலை நேரத்தில் சூரியன் மேற்கில் மறைந்தான்.  போர் நிறுத்தப்பட்டது. எல்லாரும் பாசறைக்குத் திரும்பினார்கள். கண்ணனும் அர்ஜுனனும் ஓய்வெடுத்துக் கொண்டனர்.  அர்ஜுனன் யுத்தம் செய்த களைப்பில் தூங்கி விட்டான். கண்ணன் குதிரை லாயத்திற்கு சென்று குதிரையை தேங்காய் நாரினால் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். குதிரையின் கனைப்பைக் கேட்ட அர்ஜுனன் எழுந்து வந்தான். பணியாட்கள் செய்யும் வேலையை, கண்ணன் செய்வது கண்டு திகைத்தான். “என்ன கிருஷ்ணா! இந்த வேலையைக் கூடவா நீ செய்ய வேண்டும்?” என்றான். “கடமை என்று வந்து விட்டால், அதை முழுமையாகவும், சிறப்பாகவும் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வெற்றி பெற முடியாது. நீ எனக்கு சாரதி பணியைக் கொடுத்தாய். சாரதி தானே குதிரைகளுக்கு பொறுப்பாளன். அந்தக் கடமையைத் தான் செய்து கொண்டிருக்கிறேன். நீயும் எதைச் செய்தாலும் அதை முழுமையாகச் செய். எதைச் செய்கிறாயோ அதுவாகவே மாறி விடு. வெற்றி உன் கையில்!” என்று உபதேசம் செய்தார். கண்ணனின் கடமை உணர்வு கண்டு அர்ஜுனன் வியந்தான்

அனுமன் கேட்ட கதை

Image
அனுமன் சீதையிடம், “தாயே! தங்களை துன்புறுத்திய அரக்கிகளைத் தண்டிக்க அனுமதி அளியுங்கள்” என வேண்டினார். “அனுமனே... பணியாட்களான அவர்களைத் தண்டிப்பது பாவம்” என்று தடுத்ததோடு, கதை ஒன்றைச் சொன்னாள். அனுமனும் ஆவலாக கேட்டார். புலி ஒன்று, மாலை நேரத்தில் வேடன் ஒருவனைத் துரத்தியது. உயிர் பிழைக்க ஓடிய வேடன், மரத்தின் மீதிருந்த கரடியிடம் தஞ்சமடைந்தான். இருள் சூழ்ந்தும் புலி இடம் விட்டு நகராமல் மரத்தின் கீழ் நின்றது. களைப்பால் வேடன், கரடியின் மடி மீது தலை வைத்து தூங்க ஆரம்பித்தான். அப்போது புலி கரடியிடம், “நம்மை வேட்டையாடும் இவனுக்கு அடைக்கலம் தருவது நல்லதல்ல. அவனை கீழே தள்ளினால் நான் பசியாறுவேன்,” என்றது. அதை ஏற்காத கரடி, “தஞ்சம் அடைந்தவரைக் காப்பது கடமை” என மறுத்தது. சற்று நேரத்தில் வேடன் கண் விழிக்க, கரடி ஓய்வெடுக்க விரும்பியது. வேடனின் மடி மீது தலை வைத்த கரடி தூங்கத் தொடங்கியது. அப்போது புலி, “ஏ..வேடனே! என்னிடம் தப்பிக்க எண்ணி, கரடியிடம் சிக்கி விட்டாய். கண் விழித்ததும் உன்னை கொன்று விடும்.அதைக் கீழே தள்ளினால் பசியாறிக் கொள்வேன்,” என்றது. சம்மதித்த வேடன் கரடியைத் தள்ளி விட

அந்தநாள் ஞாபகம்

Image
சுக்ரீவனுடன் இருந்த ராமர், சீதையைத் தேடிச் சென்ற வானர வீரர்களின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார். தென்திசையில் இருந்து அனுமன் விண்ணில் பறந்து வருவதைக் கண்ட சுக்ரீவன், 'ஆ... ஹனுமான்' என்று துள்ளிக் குதித்தான். ராமனும் அனுமனை உற்று கவனித்தார். அனுமன், 'கண்டேன் சீதையை' என்று சொல்லி ராமனையும், சுக்ரீவனையும் வணங்கினார். இதைக் கேட்ட ராமருக்கு மனதில் உற்சாகம் பிறந்தது. “பிரபோ... கற்புக்கரசியான சீதையை என் கண்களால் கண்டேன். அரக்கியர் சூழ அசோக வனத்தில் சோகமே உருவாக அவர் காட்சியளித்தார். தாங்கள் ராவணனுடன் போரிட்டு மீட்க வராவிட்டால், உயிரை விடுவேன் என சபதம் செய்துள்ளார். எனவே நாம் தாமதிக்காமல் இலங்கை சென்று தேவியை மீட்க வேண்டும்,” என்று சொல்லி சீதை கொடுத்து அனுப்பிய அவளது சூடாமணியைக் கொடுத்தார்.  அதைக் கண்ட ராமர் சீதையை நேரில் கண்டது போல மகிழ்ந்தார். அந்த சூடாமணியை வாங்கிய போது, திருமண நாளில், சீதையின் மெல்லிய தளிர் கையைத் தொட்ட ஞாபகம் ஏற்பட்டது. நல்ல செய்தி சொன்னதோடு, அதை உறுதிப்படுத்தும் வகையில் சூடாமணியும் அளித்த அனுமனை வாரி அணைத்தார் ராமர்.

ராமனுக்கு உதவிய சூரிய புத்திரன்

Image
ரட்சவிருதன் என்ற வானரவீரன் ஒருநாள் இமயமலைச் சாரலில் உள்ள குளத்தில் நீண்ட நேரமாக நீந்தி மகிழ்ந்தான், கரையேறியதும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானான். ஏனெனில் அந்தக் குளத்தில் நீராடும் ஆண்கள் அனைவரும் பெண்ணாக மாறும் சாபத்திற்கு ஆளாவதே அதற்குக் காரணம். அப்போது அவ்வழியாக வந்த இந்திரன், தனிமையில் இருந்த ரட்சவிருதப் பெண்ணைக் கண்டு மோகம் கொண்டான். அவர்களது சேர்க்கையால் வாலி என்னும் வானர வீரன் பிறந்தான். இந்திரன் புறப்பட்ட சிறிது நேரத்தில் சூரிய தேவன் குளக்கரைக்கு வந்தார். பெண்ணாக இருந்த ரட்சவிருதனைக் கண்டதும், அவரது ஞான திருஷ்டியில் எதிர்காலத்தில் ராம ராவண யுத்தம் நடக்கப்போவது தெரிந்தது. ராமருக்கு பலமாக ஒரு வானர வீரனைத் தன் சக்தியால் தோற்றுவிக்க சூரியன் விரும்பினார். பெண் வடிவில் நின்ற ரட்சவிருதனிடம் சூரியனின் அம்சமாக மற்றொரு குழந்தை உண்டானது. அழகிய கழுத்தைக் கொண்ட அக்குழந்தைக்கு 'சுக்ரீவன்' எனப் பெயரிடப்பட்டது.  அதன்பின் பிரம்மாவை நோக்கித் தவமிருந்த ரட்சவிருதன் மீண்டும் ஆணாக மாறினான். ரட்சவிருதனின் வயிற்றில் பிறந்த வாலி, சுக்ரீவன் இருவரும் சகோதர முறையில் வளர்ந்தனர். அவர