Posts

Showing posts from September, 2017

வசந்தன் வந்தாச்சு

Image
ராவணனை ராமன் வென்றதும், வானரப்படைகள் இலங்கையிலிருந்து புறப்படத் தயாராயினர். படைவீரர்கள் எல்லாரும் இருக்கிறார்களா என்று சரி பார்க்கும்படி சேனாதிபதியிடம் ராமர் உத்தரவிட்டார். ஒரு வானரம் மட்டும் காணாமல் போயிருப்பது தெரிந்தது. “சுவாமி.... வசந்தன் என்னும் வானரம் மட்டும் எங்கு சென்றது என்று தெரியவில்லை” என்றார் சேனாதிபதி. ஆஞ்சநேயரை அழைத்த ராமர், “காணாமல் போன வசந்தனைக் கண்டுபிடிப்பது உன் பொறுப்பு” என்றார். ஆஞ்சநேயர் எங்கு தேடியும் வசந்தன் தென்படவில்லை. இறுதியாக எமலோகத்தில் வசந்தன் இருப்பது தெரிய வந்தது. எமலோகம் சென்ற ஆஞ்சநேயர், “எமதர்மா... வசந்தன் எப்படி இங்கு வந்தான்?” என்று கேட்டார்.  எமதர்மன் பணிவுடன், “சுவாமி... கோபம் கொள்ளாதீர்கள். பூலோகத்தில் உள்ள அனைவரும் உமது புகழைக் கேட்டு மகிழ்கிறார்கள். அதைக் கேட்கும் ஆசை எனக்கும் வந்தது. நான் பூலோகம் வந்தால், என் பார்வை பலத்தால் பலரும் எமலோகம் வர வேண்டிய சூழல் உண்டாகி விடும். அதனால் வசந்தனை மட்டும் வரவழைத்து, உமது அருமை பெருமையைக் கேட்டு மகிழ்ந்தேன்,” என்ற எமன் அவனை விடுவித்தான். ஆஞ்சநேயர் வசந்தனுடன் பூலோகம் வந்து சேர்ந்த

இசை கேட்டால்

Image
தும்புருவும், நாரதரும் வீணை இசைப்பதில் வல்லவர்கள். இருவருக்கும் தாங்களே இசையில் வல்லவர்கள் என்ற கர்வம் இருந்தது. அவர்கள் ஒருமுறை இசையில் சிறந்த ஆஞ்சநேயரிடம் தீர்ப்பு கேட்க வந்தனர். தங்கள் வீணையை அருகில் இருந்த பாறையில் வைத்தனர். அவர்களது பிரச்னையை தெரிந்து கொண்ட ஆஞ்சநேயர் தோடி ராகத்தில் பாடினார். பாடல் கேட்டு வீணைகள் இருந்த பாறை உருக ஆரம்பித்தது. வீணைகள் இறுக ஒட்டிக் கொண்டன. அவற்றை எடுக்க முடியாமல் நாரதரும், தும்புருவும் திகைத்தனர்.  ஆஞ்சநேயர் கண்மூடி பாடிக்கொண்டிருந்தார். அவர் விழிக்கட்டும் என காத்திருந்த போது, ஆஞ்சநேயர் மற்றொரு பாடல் பாடினார். சிறிது நேரத்தில், பாறை இளகத் தொடங்கியது. வீணைகள் நெகிழ்ந்து வெளிவந்தன.  நாரதர் ஆஞ்சநேயரிடம், “அனுமனே! உன் இசைக்கு கல்லும் கரைகிறதே.... நீ பாடும் இந்த ராகத்தைக் கேட்க நாங்கள் என்ன பாக்கியம் செய்தோம்” என்றார். 'ஹனுமத் தோடி' என்னும் இந்த ராகம் பற்றிய வரலாறு, அருணாசல கவிராயர் பாடிய ராம நாடக கீர்த்தனையில் இடம் பெற்றுள்ளது.

யார் இந்த மாளிகைப்புறத்தம்மன்?

Image
ஐயப்பன் சன்னிதியை அடுத்து மாளிகைப்புறத்தம்மன் எனப்படும் மஞ்சமாதா சன்னிதி உள்ளது. இவளது கதை தெரியுமா? தத்தாத்ரேயர் என்ற மகான் சிவன், திருமால், பிரம்மா ஆகியோரின் அம்சமாக பூமியில் பிறந்தவர். அவருக்கும் மூன்று தேவிகளான பார்வதி, லட்சுமி, சரஸ்வதியின் அம்சமான லீலா என்பவளுக்கும் திருமணம் நடந்தது. இவள் காலவ முனிவரின் மகளாக பிறந்தவள். லீலாவுக்கு பணம், பகட்டு, இல்லற வாழ்வு ஆகியவற்றின் மீது தீராத ஆசை. தத்தாத்ரேயரோ ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டார். ஒருநாள் இருவருக்கும் கடும் பிரச்னை ஏற்பட்டது. ''உங்கள் மகிஷியான (மனைவி) என் கருத்தை ஏற்க மறுக்கிறீர்களே!'' என லீலா கோபத்துடன் சொன்னாள். உடனே தத்தர், ''உன்னை நீயே மகிஷி என்று சொல்லிக் கொண்டதால், நீ மகிஷியாகவே (எருமைத்தலை கொண்டவள்) பிறப்பாய். கோபம், காமம் ஆகிய குணங்களைக் கொண்ட நீ அரக்கியாகத் திரிவாய்,'' என சாபமிட்டார். பதிலுக்கு லீலா, ''நான் எருமையாகப் பிறந்தால், நீங்களும் அப்படித்தான் பிறப்பீர்கள்,'' என்றாள். சாபத்தின் பலனாக அவள் கரம்பன் என்பவளின் மகளாகவும், மகிஷாசுரன் என்பவன

கடமை... அது கடமை

Image
மகாபாரத யுத்தம் நடந்து கொண்டிருந்தது. கிருஷ்ணர் அர்ஜுனனின் தேருக்கு சாரதியாக இருந்து வழி நடத்தினார். மாலை நேரத்தில் சூரியன் மேற்கில் மறைந்தான்.  போர் நிறுத்தப்பட்டது. எல்லாரும் பாசறைக்குத் திரும்பினார்கள். கண்ணனும் அர்ஜுனனும் ஓய்வெடுத்துக் கொண்டனர்.  அர்ஜுனன் யுத்தம் செய்த களைப்பில் தூங்கி விட்டான். கண்ணன் குதிரை லாயத்திற்கு சென்று குதிரையை தேங்காய் நாரினால் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். குதிரையின் கனைப்பைக் கேட்ட அர்ஜுனன் எழுந்து வந்தான். பணியாட்கள் செய்யும் வேலையை, கண்ணன் செய்வது கண்டு திகைத்தான். “என்ன கிருஷ்ணா! இந்த வேலையைக் கூடவா நீ செய்ய வேண்டும்?” என்றான். “கடமை என்று வந்து விட்டால், அதை முழுமையாகவும், சிறப்பாகவும் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வெற்றி பெற முடியாது. நீ எனக்கு சாரதி பணியைக் கொடுத்தாய். சாரதி தானே குதிரைகளுக்கு பொறுப்பாளன். அந்தக் கடமையைத் தான் செய்து கொண்டிருக்கிறேன். நீயும் எதைச் செய்தாலும் அதை முழுமையாகச் செய். எதைச் செய்கிறாயோ அதுவாகவே மாறி விடு. வெற்றி உன் கையில்!” என்று உபதேசம் செய்தார். கண்ணனின் கடமை உணர்வு கண்டு அர்ஜுனன் வியந்தான்

அனுமன் கேட்ட கதை

Image
அனுமன் சீதையிடம், “தாயே! தங்களை துன்புறுத்திய அரக்கிகளைத் தண்டிக்க அனுமதி அளியுங்கள்” என வேண்டினார். “அனுமனே... பணியாட்களான அவர்களைத் தண்டிப்பது பாவம்” என்று தடுத்ததோடு, கதை ஒன்றைச் சொன்னாள். அனுமனும் ஆவலாக கேட்டார். புலி ஒன்று, மாலை நேரத்தில் வேடன் ஒருவனைத் துரத்தியது. உயிர் பிழைக்க ஓடிய வேடன், மரத்தின் மீதிருந்த கரடியிடம் தஞ்சமடைந்தான். இருள் சூழ்ந்தும் புலி இடம் விட்டு நகராமல் மரத்தின் கீழ் நின்றது. களைப்பால் வேடன், கரடியின் மடி மீது தலை வைத்து தூங்க ஆரம்பித்தான். அப்போது புலி கரடியிடம், “நம்மை வேட்டையாடும் இவனுக்கு அடைக்கலம் தருவது நல்லதல்ல. அவனை கீழே தள்ளினால் நான் பசியாறுவேன்,” என்றது. அதை ஏற்காத கரடி, “தஞ்சம் அடைந்தவரைக் காப்பது கடமை” என மறுத்தது. சற்று நேரத்தில் வேடன் கண் விழிக்க, கரடி ஓய்வெடுக்க விரும்பியது. வேடனின் மடி மீது தலை வைத்த கரடி தூங்கத் தொடங்கியது. அப்போது புலி, “ஏ..வேடனே! என்னிடம் தப்பிக்க எண்ணி, கரடியிடம் சிக்கி விட்டாய். கண் விழித்ததும் உன்னை கொன்று விடும்.அதைக் கீழே தள்ளினால் பசியாறிக் கொள்வேன்,” என்றது. சம்மதித்த வேடன் கரடியைத் தள்ளி விட

அந்தநாள் ஞாபகம்

Image
சுக்ரீவனுடன் இருந்த ராமர், சீதையைத் தேடிச் சென்ற வானர வீரர்களின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார். தென்திசையில் இருந்து அனுமன் விண்ணில் பறந்து வருவதைக் கண்ட சுக்ரீவன், 'ஆ... ஹனுமான்' என்று துள்ளிக் குதித்தான். ராமனும் அனுமனை உற்று கவனித்தார். அனுமன், 'கண்டேன் சீதையை' என்று சொல்லி ராமனையும், சுக்ரீவனையும் வணங்கினார். இதைக் கேட்ட ராமருக்கு மனதில் உற்சாகம் பிறந்தது. “பிரபோ... கற்புக்கரசியான சீதையை என் கண்களால் கண்டேன். அரக்கியர் சூழ அசோக வனத்தில் சோகமே உருவாக அவர் காட்சியளித்தார். தாங்கள் ராவணனுடன் போரிட்டு மீட்க வராவிட்டால், உயிரை விடுவேன் என சபதம் செய்துள்ளார். எனவே நாம் தாமதிக்காமல் இலங்கை சென்று தேவியை மீட்க வேண்டும்,” என்று சொல்லி சீதை கொடுத்து அனுப்பிய அவளது சூடாமணியைக் கொடுத்தார்.  அதைக் கண்ட ராமர் சீதையை நேரில் கண்டது போல மகிழ்ந்தார். அந்த சூடாமணியை வாங்கிய போது, திருமண நாளில், சீதையின் மெல்லிய தளிர் கையைத் தொட்ட ஞாபகம் ஏற்பட்டது. நல்ல செய்தி சொன்னதோடு, அதை உறுதிப்படுத்தும் வகையில் சூடாமணியும் அளித்த அனுமனை வாரி அணைத்தார் ராமர்.

ராமனுக்கு உதவிய சூரிய புத்திரன்

Image
ரட்சவிருதன் என்ற வானரவீரன் ஒருநாள் இமயமலைச் சாரலில் உள்ள குளத்தில் நீண்ட நேரமாக நீந்தி மகிழ்ந்தான், கரையேறியதும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானான். ஏனெனில் அந்தக் குளத்தில் நீராடும் ஆண்கள் அனைவரும் பெண்ணாக மாறும் சாபத்திற்கு ஆளாவதே அதற்குக் காரணம். அப்போது அவ்வழியாக வந்த இந்திரன், தனிமையில் இருந்த ரட்சவிருதப் பெண்ணைக் கண்டு மோகம் கொண்டான். அவர்களது சேர்க்கையால் வாலி என்னும் வானர வீரன் பிறந்தான். இந்திரன் புறப்பட்ட சிறிது நேரத்தில் சூரிய தேவன் குளக்கரைக்கு வந்தார். பெண்ணாக இருந்த ரட்சவிருதனைக் கண்டதும், அவரது ஞான திருஷ்டியில் எதிர்காலத்தில் ராம ராவண யுத்தம் நடக்கப்போவது தெரிந்தது. ராமருக்கு பலமாக ஒரு வானர வீரனைத் தன் சக்தியால் தோற்றுவிக்க சூரியன் விரும்பினார். பெண் வடிவில் நின்ற ரட்சவிருதனிடம் சூரியனின் அம்சமாக மற்றொரு குழந்தை உண்டானது. அழகிய கழுத்தைக் கொண்ட அக்குழந்தைக்கு 'சுக்ரீவன்' எனப் பெயரிடப்பட்டது.  அதன்பின் பிரம்மாவை நோக்கித் தவமிருந்த ரட்சவிருதன் மீண்டும் ஆணாக மாறினான். ரட்சவிருதனின் வயிற்றில் பிறந்த வாலி, சுக்ரீவன் இருவரும் சகோதர முறையில் வளர்ந்தனர். அவர

ஆதவனால் கிடைத்த அன்பு மகன்

Image
கிளிமுகம் கொண்ட சுகபிரம்ம முனிவர் பூவுலகில் இருந்து வானுலகம் புறப்பட்டார். மேரு மலையை வலம் வந்து கொண்டிருந்த சூரியன் அவரைக் கண்டார்.  “சுகபிரம்மரே! பிரம்மச்சாரியான தங்களுக்கு இல்லற வாழ்வின் பெருமையோ, பிள்ளைச் செல்வத்தின் மகத்துவமோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட நிலையில், வானுலகம் செல்லும் உங்களை என்னால் அனுமதிக்க முடியாது” என தடுத்தார் சூரியன். அவரிடம் முனிவர், “இல்லற வாழ்வில் ஈடுபட்டால் தான் மனிதன் பக்குவநிலை பெற முடியும் என்பது உண்மை தான். என்றாலும் என் போன்ற முனிவர்களுக்கு அந்த விதி பொருந்தாது. நீர்க்குமிழி போல அற்பகாலம் நீடிக்கும் சம்சார வாழ்வில் ஈடுபட எனக்கு விருப்பமில்லை. சாதாரண மனிதனுக்குரிய விதிகளை என்னுடன் பொருத்திப் பார்க்கத் தேவையில்லை,” என்றார் சுகபிரம்மர். சூரியன் சுகபிரம்மரின் விளக்கம் கேட்டு சிரித்தார். “வியாசரின் மகனான தாங்களே சாஸ்திரத்தை மீறுவது முறையல்ல. முன்னோருக்குரிய பிதுர்கடன் செய்ய புதல்வன் ஒருவனைப் பெற்றுக் கொள்வது அனைவருக்கும் அவசியம். சாஸ்திரத்தை மதிப்பது தங்களின் கடமை,” என்றார் சூரியன். சூரியனின் பேச்சைக் கேட்ட சுகபிரம்மர் மனம்

மூச்சு தந்த பேச்சு

Image
ராவணனின் தம்பி விபீஷணன், தன் அண்ணனின் மோசமான போக்கை சுட்டிக்காட்டினான். அவன் திருந்தாததால், ராமனுடன் சேர நினைத்து அவரைத் தேடி வந்தான். அவனை தங்களுடன் சேர்க்கக்கூடாது என்று சுக்ரீவன் உள்ளிட்ட வானரத்தலைவர்கள் எதிர்த்தனர்.  எதிரியாக இருந்தாலும், தன்னைச் சரண் அடைபவனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது உயிர் மூச்சான கொள்கை. ஆனால் தன் எண்ணத்திற்கு, வானரர்கள் குறுக்கே நிற்பதைக் கண்டு, அவரது மூச்சே நின்று விட்டது. அப்போது ஆஞ்சநேயர் விபீஷணனுக்கு ஆதரவாகப் பேசினார். அவன் நல்லவன் என்று எடுத்துக் கூறினார். அவர் சொன்னதைக் கேட்டவுடன், சுக்ரீவன் உள்ளிட்டவர்கள் அவரது கருத்தை ஏற்று, விபீஷணனை தங்களுடன் சேர்க்க ஒப்புக்கொண்டனர். ராமனுக்கும் அப்போது தான் மூச்சே வந்தது. மூச்சுக்கு தேவை காற்று. ஆஞ்சநேயர் வாயு மைந்தன் அல்லவா! அவர் பேசியதுமே ராமனுக்கு மூச்சு கிடைத்து விட்டது. கடவுளுக்கே உயிர் கொடுத்த கடவுள் அவர். நமக்கு ஏதாவது சிரமம் வந்தால் அனுமனுக்கு பிடித்தமான 'ஸ்ரீராமஜெயம்' என்ற மந்திரத்தை பக்தியோடு சொன்னால் போதும். அது பறந்துவிடும்.

தியாகச் சின்னம் ஊர்மிளா

Image
ராமாயணம் படித்த பல பேருக்கு, ஊர்மிளா பற்றி அதிகம் தெரியாது, ஆனால், அந்த இதிகாசத்தில் மிக அதிக மனத்துயர் அடைந்த பெண் யார் என்று பார்த்தால், ஊர்மிளா தான். இவள் லட்சுமணனின் மனைவி. ராமன் காட்டுக்கு போக வேண்டும் என்பது ஆணை. ஆனால், அவரை விட்டு எப்போதும் பிரியாத தம்பி லட்சுமணனும் உடன் கிளம்புகிறான். இதை அவனது தாய் சுமித்திரையும் ஆதரிக்கிறாள். அவனது மனைவி ஊர்மிளா, நானும் வருகிறேன் என்றாள்.  அதற்கு லட்சுமணன், “நான் செல்வது காவல்காரன் வேலை பார்க்க, ராமன் ஒன்றும் இன்னொரு நகருக்கு செல்லவில்லை, அவன் செல்வது கானகம், கொடிய மிருகங்கள் வாழும் காடு, அவர்கள் நலமாய் இருக்க வேண்டும் என்றால், நான் எப்போதும் கண் விழித்திருக்க வேண்டும். அவர்களைப் பாதுகாக்கும் பணியில் இருக்கும் போது, உன்னையும் சேர்த்து பாதுகாப்பது சிரமமல்லவா... எனவே நீ நாட்டில் இரு,” என்று சொல்லி விட்டான். ஊர்மிளா கணவன் வார்த்தைக்கு மறு வார்த்தை சொல்லவில்லை, 'சரி' என்று சம்மதித்து விட்டாள், லட்சுமணன் காட்டுக்குப் போய் விட்டான். காட்டில் இருந்த போது அவனது மனம் கலங்கியது, ''பாவம் என் ஊர்மிளா....என்ன செய்கிறாள

சரணடைந்தவரைக் காப்பாற்றுங்கள்

Image
அனுமன் இலங்கையை தீக்கிரையாக்கி விட்டு சென்ற பின், ராவணன், தன் தம்பி விபீஷணனுடன் பேசினான். விபீஷணன் அவனிடம், ''ராமர் நமது ராஜ்யத்தை அழிக்கும் முன்பு, சீதையை ராமரிடம் திருப்பி அனுப்பி விடுவதே நலம்,'' என்றார். இதைக் கேட்டு ராவணன் கோபமடைந்து அவனை விரட்டினான். விபீஷணன் அவனிடம், ''நான் உன் நலனை உத்தேசித்து பேசிய பேச்சு உனக்கு பிடிக்கவில்லை. 'வினாச காலே விபரீத புத்தி' என்பார்கள். அழிவு ஒருவனை நெருங்கும் போது, அவனது அறிவு வேலை செய்வதில்லை,'' என்று கூறி வெளியேறினான். ராமரை சரண் அடைந்தான். ராமர் அவனை தன்னுடன் சேர்த்துக் கொள்வது குறித்து சுக்ரீவனுடன் ஆலோசனை செய்தபோது, அவர் விபீஷணரை சேர்க்கக் கூடாது என்றார். ஆனால் ராமரோ, இந்த ராட்சதன் துஷ்டனாகவே இருந்தாலும், நம்மைச் சரணடைந்து விட்டான். அடைக்கலம் கேட்டு வந்தவனை, பாதுகாக்க தவறுவது மகாபாவம்,'' என்றார்.

அம்மன் விழா எதற்காக

Image
ஒரு சமயம் கிரகங்களின் சஞ்சாரத்தால் சிவன், பார்வதியை விட்டு பிரிய நேர்ந்தது. இதை அறிந்த 'ஆடி' என்னும் அரக்கன், சிவனின் அழகில் மயங்கி அவரை அடைய விரும்பினான். ஒரு ஆண், இன்னொரு ஆணை அடைய முடியாது என்பதால், பார்வதி போல உருவத்தை மாற்றிக் கொண்டு காதல் மொழிபேசினான். தன்னை நெருங்குவது பார்வதி அல்ல என்பதை உணர்ந்த சிவன், திரிசூலத்தை அரக்கன் மீது ஏவினார். அது அரக்கனின் மார்பில் குத்தி உயிரைக் குடித்தது. தன்னுடைய வடிவத்தில் அரக்கன் வந்ததால், அவன் மீது இரக்கம் கொண்ட பார்வதி அவனுக்கு நற்கதி வழங்கினாள். அரக்கனின் பெயரால் ஆடி என ஒரு மாதத்திற்கு பெயரிட்டதோடு, அந்த மாதத்தில் தன்னை வழிபடுவோருக்கு யோக பலன்களை வாரி வழங்கினாள். இதன் அடிப்படையில் ஆடி முழுவதும் அம்மன் கோயில்களில் வழிபாடு நடக்கிறது.

நவராத்திரி சுபராத்திரி

Image
ஒருமுறை ராமனை சந்தித்த நாரதர் “ராமா! நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தே சிவபெருமான் திரிபுரங்கள் எனப்படும் அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளை எரித்தார். மது கைடபர் என்னும் அசுரர்களை திருமால் கொன்றழித்தார். இந்திரன் விருத்திராசுரனை வென்றான். பிருகு முதலிய முனிவர்களும் நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து பேறு பெற்றனர்,” என்றார். அந்த சமயத்தில் சீதையை ராவணன் கடத்திச் சென்று விட்ட துக்கத்தில் இருந்தார் ராமபிரான். நவராத்திரி விரதத்தால் ராவணனை வெல்வதற்குரிய ஊக்கத்தையும், முயற்சிகளையும் பெறலாம் என்பதால் நாரதரிடம், அதைப்பற்றி கேட்டார் ராமபிரான். “என்றும் எங்கும் நிலையாக இருப்பவள் ஆதிசசக்தி. உலக அன்னையாகிய சக்தி மக்களின் துன்பங்களை நொடியில் போக்கும் சக்தி உடையவள். நானே உனக்கு ஆசானாக இருந்து, தேவி விரதம் பூர்த்தியாகும்படி செய்கிறேன்.  உன்னுடைய வெற்றி, மாற்றான் மனைவி மீது ஆசைப்படுபவர்களுக்கு அழிவு உறுதி என்ற பாடத்தை உலகத்திற்கு தரும்,” என்று ஆசிர்வதித்தார். உடனடியாக, ராமன் தான் தங்கியிருந்த இடத்தில் பீடம் ஒன்றை நிறுவினார். தேவியை ஸ்தாபித்து ஒன்பது நாட்கள் விரதம் மேற்கொண்டார். அஷ்டமி தின

சொர்க்கம் யாருக்கு

Image
விஸ்வாமித்திரரின் மகன் அஷ்டகன் அஸ்வமேத யாகம் செய்தான். யாகத்தில் மன்னர்கள், ரிஷிகள் பங்கேற்றனர். யாகத்தின் முடிவில் மன்னன் தன் நண்பர்களான பிரதர்த்தனன், வசுமனஸ், சிபி மற்றும் நாரத மகரிஷி ஆகியோருடன் தேரில் உலா சென்றான்.  நாரதரிடம் அஷ்டகன், “மகரிஷி! நாங்கள் நால்வரும் புகழ் பெற்ற அரசர்கள். தாங்களோ தலைசிறந்த ரிஷி. இப்போது நம் ஐவரில் நால்வர் மட்டுமே சொர்க்கத்துக்கு செல்லலாம் என்றால் தேரிலிருந்து இறங்க வேண்டியவர் யார்?” என்று கேட்டான். நாரதர் அவனிடம், ''நீ தான்” என பதிலளித்தார். உடனே அஷ்டகன், ''ஏன் என்னை இறங்கச் சொல்வீர்கள்?'' என கேட்டான்.“அஷ்டகா! யாகத்தின் போது நீ ஆயிரக்கணக்கில் பசு தானம் செய்தது பற்றி பிறரிடம் பெருமையாகப் பேசினாய். கொடுத்ததை சொல்லி பெருமைப் படுபவனுக்கு சொர்க்கத்தில் இடம் கிடையாது,” என விளக்கினார். அடுத்து, ”மூவர் மட்டும் தான் சொர்க்கத்துக்கு செல்ல முடியும் என்றால் நம் நால்வரில் யாரை இறக்குவது?” என மற்ற அரசர்கள் நாரதரிடம் கேட்டனர். அதற்கு நாரதர், “இப்போது இறங்க வேண்டியவன் பிரதர்த்தனன். ஒரு முறை இவனுடன் மூன்று குதிரைகள் பூட்டப்பட்ட ர

யானையால் விமோசனம் பெற்ற பல்லிகள்

Image
ஸ்ருங்கிபேரர் என்ற முனிவருக்கு ஹேமன், சுக்லன் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்கள் கௌதம முனிவரிடம் வித்தை பயின்றனர். இவர்கள் இருவரும் விஷ்ணு பூஜைக்குப் பழம், புஷ்பம், தீர்த்தம் கொடுக்கும் பணியினை மேற்கொண்டிருந்தனர். ஒருநாள் அவ்வாறு கொண்டு வந்த தீர்த்தத்தை மூடாமல் வைக்க, அதில் ஒரு பல்லி விழுந்து விட்டது. இதை அறியாத இவர்கள் அத்தீர்த்தத்தை அப்படியே கொண்டு வந்து கௌதம முனிவரிடம் கொடுக்க, முனிவர் அதைப் பெற்றுக் கொண்டபோது அதில் இருந்த பல்லி வெளியில் துள்ளி ஓடியது. இதைக் கண்டு கோபமுற்ற கௌதம முனிவர் அவர்களை பல்லியாகிவிடுமாறு சபித்துவிட்டார். இதனால் கவலை அடைந்த ஹேமன், சுக்லன் இருவரும் முனிவரின் பாதங்களில் விழுந்து, பாபவிமோசனமும் கோரினர். உடனே முனிவர் சாந்தமடைந்து, ‘‘இந்திரன் யானை வடிவம் கொண்டு (கஜேந்திரனாக) வரதராஜப் பெருமாளைத் தரிசிக்கக் காஞ்சிபுரம் வருவார்! அச்சமயம் நீங்கள் அங்கு சென்று வரதரை தரிசித்தால் உங்கள் சாபம் அகலும்!’’ என்று கூறினார். அதன்பின் அவ்விருவரும் இத்தலத்திற்கு வந்து மூலவர் அறையின் வெளிப்பிராகாரத்தில் மூலவரின் வடகிழக்கே பல்லிகளாக அமர்ந்தனர். குறிப்பிட்ட காலத்தில

தகுதியில்லாதவர்களின் காலில் விழுந்தால்...

Image
அஸ்வத்தாமன், மகாபலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபாச்சாரியார், பரசுராமன், மார்கண்டேயன் ஆகியோர் சப்த சிரஞ்சீவிகள் எனப்படுவர்.  மரணமில்லாப் பெருவாழ்வு எய்தியிருக்கும் இவர்களின், பூதவுடல் நம் கண்ணில் படவில்லை என்றாலும், இன்னும் இந்தப் பூமியில் உலவிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த சிரஞ்சீவிகளில் ஒரு பிரபலம் மார்கண்டேயன். பின்னே.. இவனைக் காப்பாற்ற வேண்டி தானே சிவபெருமானே காலனை காலால் உதைத்தார்? எமனுக்கு பயந்து 12 வயதே நிரம்பிய இந்த பாலகன், சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்ததும், அவர் காலனை காலால் உதைத்து இவனை காத்தருளியதும் அநேகருக்கு தெரிந்திருக்கும். மார்கண்டேயனுக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாயிற்று என்று தெரியுமா? மார்கண்டேயனுக்கு 12 ஆவது வயதில் மரணம் சம்பவிக்கும் என்றும், அவனுக்கு அல்பாயுசு தான் என்றும் அவன் தந்தையான மிருகண்ட மகரிஷிக்கும் தெரியும். ஆகையால் மகனை காக்க விரும்பிய மிருகண்ட முனிவர், அவனுக்கு உபநயனம் செய்வித்த பின்னர், “பெரியோர்கள் எவரை சந்தித்தாலும் தயங்காது அவர்கள் காலில் விழுந்து நமஸ்கரித்து அவர்களது ஆசிகளை பெற்றுக் கொள்” என்று சொல்லியிருந்தார். ம

இருப்பது போதும்!

Image
ஜைதீஷவ்ய முனிவர் சிவலோகம் வந்தார். அப்போது பார்வதி சிவனிடம் ''பெருமானே! பொருள் என்றால் என்ன? சக்தி என்றால் என்ன?'' என கேட்டது முனிவர் காதில் விழுந்தது. அதற்கு சிவன், ''நான் தான் பொருள். நீ அதில் அடங்கியுள்ள சக்தி. எனவே நீயின்றி நானில்லை, நானின்றி நீயில்லை,'' என்றார். இதை முனிவர் மறுத்தார்.  ''பொருள் தான் உயர்ந்தது. சக்தி என்பது அதனுள் அடங்கியிருக்கும் ஒன்றே!'' என்றார். இதுகேட்ட பார்வதிக்கு கோபம்.  ''என்னை இவர் அவமானப்படுத்துகிறாரே!'' என்று சிவனிடம் கேட்க, ''பார்வதி! அவரிடம் கோபம் கொள்ளாதே. அவர் ஆசைகளைத் துறந்த ஞானி,'' என்றார் சிவன். ''ஆசை இல்லாத ஒருவர் இருக்க முடியுமா?'' என்று பார்வதி ஆச்சரியப்படவே, அவளை முனிவரின் ஆஸ்ரமத்திற்கு அழைத்துச் சென்றார் சிவன். அங்கே முனிவர் கிழிந்த துணிகளை சேர்த்து, தனக்கு ஆடையாக தைத்துக் கொண்டிருந்தார் முனிவர். அவரிடம், ''ஏதாவது வரம் கேளுங்கள்?'' என்றார் சிவன். ''எதுவும் தேவையில்லை. இருப்பதே போதும். த

சிரித்தாள் தங்கப்பதுமை

Image
அசோக வனத்தில் சீதை மரத்தடியில் அமர்ந்திருக்க, அதன் மீது அனுமன் ராமபிரானிடம் இருந்து கொண்டு வந்த செய்தியுடன், அரக்கர்களுக்குத் தெரியாமல் அமர்ந்து இருக்கிறார். அப்போது, அங்கு வந்த ராவணன் , சீதா தேவியிடம், ''பெண்ணே! எவ்வாறு ஓடிவிட்ட நதியின் பிரவாகம், திரும்பப் போவதில்லையோ, அதே போலத் தான் இளமையும் போய் விட்டால் திரும்பாது. அதனால், உனது இளமைப் பருவத்தை வீணாக்காமல், என்னை மணந்து இலங்கையின் மகாராணி போல வாழலாமே,'' என்று ஆசை வார்த்தைகளைக் கூறினான். அதுகேட்ட சீதை, ஒரு துரும்பை அவன் முன் போட்டு சிரித்தாள். உணர்ச்சி வசப்பட்டு சீற வேண்டிய நேரத்தில், அவள் சிரித்ததற்கான காரணம் என்ன தெரியுமா? சீதா-ராமர் கல்யாணத்திற்கு பரமேஸ்வரனுக்கு அழைப்பு அனுப்பவில்லை. காரணம், அவர் எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பவர். அதனால் அழைப்பை எந்த இடத்திற்கு அனுப்புவது என்று தெரியாமல், ஜனகர் அதைத் தவிர்த்து விட்டார். ஆனால், சீதைக்குத் திருமணம் நடப்பதை அறிந்து பரமேஸ்வரன் மிதிலைக்கு வந்து விட்டார். ஆனால், என்ன செய்ய... அவர் வருவதற்குள் திருமணம் முடிந்து, பெரியவர்களை நமஸ்கரித்துக் கொண்டு இருந்தார்கள

லட்சுமி வரும் வேளை

Image
அர்ஜுனனும், கிருஷ்ணரும் தெருவில் உலவிக் கொண்டிருந்த போது, ஒரு முதியவர் தர்மம் செய்யும்படி கேட்டார்.  அர்ஜுனன் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தான். முதியவருக்கு மகிழ்ச்சி.  ''ஆகா... இது நம் குடும்பத்திற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு போதுமே!'' என்றெண்ணி வீட்டுக்கு புறப்பட்டார். இதைக் கவனித்த ஒரு திருடன், பொற்காசுகளை வயோதிகரிடமிருந்து பறித்துச் சென்று விட்டான். சில தினங்கள் கழித்து, மீண்டும் அவ்வழியே வந்த அர்ஜுனனிடம் முதியவர் நடந்ததைச் சொல்ல, விலையுயர்ந்த நவரத்தின கல்லை கொடுத்து, அதையாவது பத்திரமாக கொண்டு செல்லும்படி கூறினான்.  முதியவரும் கவனமாக வீட்டுக்குக் கொண்டு சென்று, மனைவி, பிள்ளைகளிடம் கூட சொல்லாமல், பரணில் இருந்த பானையில் ஒளித்து வைத்து விட்டார். இதைஅறியாத அவரது மனைவி பரணிலிருந்த பானையை எடுத்துக் கொண்டு ஆற்றுக்கு தண்ணீர் எடுக்க சென்றாள். பானையை கழுவும் போது உள்ளிருந்த கல் ஆற்றில் விழுந்து விட்டது.  அவள் பானையுடன் வீட்டில் நுழைந்த போது, வெளியே சென்றிருந்த வயோதிகர் அந்த குடத்தைப் பார்த்து அதிர்ச்சியாகி ''கல் எங்கே?'' என மனைவியைக் கேட்டா

யார் கண்ணுக்கு தெய்வம் தெரியும்?

Image
ரத்தினபுரி மன்னன் மயூரத்வஜன் வீரத்தில் சிறந்தவன். கிருஷ்ணரிடம் பக்தி கொண்டவன். இவனது மகன் தாமரத்வஜனும் தந்தையைப் போல் வீரம் கொண்டவன். ஒருமுறை பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் அஸ்வமேத யாகம் செய்தார். உலகிலுள்ள எல்லா நாடுகளையும் தன் வசம் கொண்டு வருவதே இந்த யாகத்தின் நோக்கம். இதற்காக ஒரு குதிரையை நாடுதோறும் அனுப்புவர். அந்த நாட்டு மன்னன், தன் நாட்டை இழக்க இஷ்டப்படாவிட்டால் யார் குதிரைக்கு பாதுகாவலாக செல்கிறாரோ அவரை எதிர்த்து போரிட வேண்டும். கிருஷ்ணரின் ஆலோசனைப்படி தர்மர் யாகக்குதிரையை தன் தம்பி அர்ஜுனன் பொறுப்பில் அனுப்பி வைத்தார். அதே சமயம் மயூரத்வஜனும் அஸ்வமேத யாகம் நடத்தினான். யாகக் குதிரையை மகன் தாமரத்வஜன் பாதுகாப்பில் அனுப்பி வைத்தான். மணிப்பூரில் இருவரும் சந்தித்துப் போரிட்டனர். தாமரத்வஜன் அர்ஜுனனைத் தோற்கடித்து இரண்டு குதிரைகளுடனும் தன் நாடு திரும்பினான். கிருஷ்ணரின் ஆலோசனையின் பேரில் அனுப்பப்பட்ட அர்ஜுனனைத் தன் மகன் தோற்கடித்ததில் மயூரத்வஜனுக்கு உடன்பாடில்லை. தன் இஷ்ட தெய்வமான கிருஷ்ணரை அவமானப்படுத்தி விட்டோமோ என வருந்தினான். தோற்ற அர்ஜுனன் கோபமாக இருந்தான். கி

உறவுகள் தொடர்கதை

Image
விதர்ப்ப தேச மன்னன் பீஷ்மகனின் மகள் ருக்மணி. இவளுக்கு ருக்மி என்பவன் உட்பட ஐந்து சகோதரர்கள். விதர்ப்ப நாட்டுக்கு வரும் பக்தர்கள், கிருஷ்ணரைப் பற்றி புகழ்ந்து பேசுவர். இதைக் கேட்கும் ருக்மிணி, கிருஷ்ணர் யாரென்று தெரியாமலேயே அவர் மீது காதல்கொண்டாள். அவரை திருமணம் செய்ய முடிவெடுத்தாள். ருக்மணியின் முடிவை அவளது அண்ணன் ருக்மி எதிர்த்தான். ஏனெனில் அவன் கிருஷ்ணருக்கு எதிரி. சகோதரியை தன் நண்பன் சிசுபாலனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தான். திருமண ஏற்பாடுகள் முடிந்து விட்டன. ருக்மணி கண்ணீர் வடித்தாள். தன் மனதில் உள்ளதை கிருஷ்ணருக்கு எழுதி அதை அரண்மனையில் இருந்த அந்தணர் ஒருவரிடம், கொடுத்து அனுப்பினாள். “அன்பரே! நானாக உங்களை நாடி வந்தால் அது தவறான அபிப்ராயத்தை உருவாக்கும். எனவே நீங்கள் இங்கு வந்துள்ள சிசுபாலனை வென்று என்னைத் துாக்கிச் சென்று திருமணம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் வராவிட்டால் நான் இறந்து விடுவேன். திருமணத்துக்கு முதல் நாள் அம்பிகை கோயிலுக்கு  மணமகளை அழைத்துச் செல்வது எங்கள் நாட்டு வழக்கம். வழிபாடு முடிந்ததும் நீங்கள் என்னை கடத்தி விட வேண்டும்” என எழுதியிருந்தாள்.

கடவுளை நினைக்கும் நேரம்

Image
மகாபாரத போரில் வெற்றி பெற்ற தர்மர் பட்டம் சூட்டிக்கொண்டார். பாண்டவர்களின் தாயான குந்தியிடம் விடைபெற கிருஷ்ணர் வந்தார். குந்தி அவரிடம் ''எங்களை விட்டுச் செல்கிறாயே! இனி உன்னை காணும் பாக்கியம் இல்லாமல் போய் விடுமே'' என வருந்தினாள். ''கவலை வேண்டாம். விரும்பும் வரம் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்'' என்றார் கிருஷ்ணர். அதற்கு குந்தி ''கிருஷ்ணா! தினமும் வாழ்வில் சிறு துன்பமாவது நேரும் வரம் கொடு'' என்றாள். ''எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும் என்று தானே கேட்பார்கள். நீங்கள் மாறாக கேட்கிறீர்களே!'' என்றார் கிருஷ்ணர். ''கிருஷ்ணா! இன்பம் வந்தால் கடவுளின் நினைவு வருவதில்லை. துன்பப்படும் போது தான் வருகிறது. உன்னை தினமும் நினைக்க வேண்டும் என்பதால் இப்படி கேட்டேன்'' என்றாள் குந்தி

அருகில் இருக்க வேண்டியது யார்?

Image
மகாபாரத போரில், கிருஷ்ணரின் உதவி நாடி பாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனனும், கவுரவர் தலைவன் துரியோதனனும் வந்தனர். கிருஷ்ணர்  அவர்களிடம், ''ஆயுதமின்றி நான் ஒரு பக்கம் நிற்பேன். இன்னொரு பக்கம் என் படைகள் நிற்கும். எது வேண்டும் என்பதை அர்ஜூனன் முதலில் தெரிவிக்கலாம்'' என்றார். ''கிருஷ்ணா! உன் துணை கிடைத்தால் போதும்'' என்றான் அர்ஜூனன். துரியோதனன் அவனிடம் ''அர்ஜூனன் உன் துணையை மட்டும் கேட்டதால், உன் படைகள் என் பக்கம் தானே'' என சொல்லி மகிழ்ச்சியுடன் புறப்பட்டான். அதன் பின் கிருஷ்ணர் ''அர்ஜூனா! வாய்ப்பு கிடைத்தும் ஆயுதம் இல்லாத என்னை மட்டும் ஏன் விரும்புகிறாய்?'' என்றார். ''கிருஷ்ணா! பரமாத்மாவான உன் துணையின்றி, எத்தனை ஆயிரம் படைகள் இருந்து என்ன பயன்? அதனால் நான் உன் துணையைக் கேட்டேன்'' என்றான் அர்ஜூனன். இதன்படியே போரிலும் பாண்டவர்களே வெற்றி பெற்றனர்.

கலியுகத்தில் கடைத்தேற்றும் கிருஷ்ண நாமம்

Image
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் வைகுண்டம் எழுந்தருள்வதை சுகப்பிரம்ம ரிஷி பரீட்சித்தின் மனக் கண்களில் நிறுத்தினார். ‘‘என் பிரிய ராஜனே, அப்போது கிருஷ்ணரின் தேகம் புகை சூழா அக்கினிபோல ஜொலித்தது. தேகத்திலிருந்து பரவிய ஒளி, எண் திக்கையும் பிரகாசப்படுத்தியது. பவழம் போன்ற சிவந்த உள்ளங்கால். முத்துகளைப் பதித்தாற்போல நகங்கள். அழகுக்கு அழகு செய்யும் பீதாம்பரம். மேகலை எனும் ரத்தின ஆபரணங்கள் கோர்த்த தங்க அரைஞாண் இடுப்பை அலங்கரித்தது. மெல்லிய ஓடையாக, ஆலிலைபோல மென்மையான திருவயிறு. விசாலமான மார்பு, அதில் உறைந்த தாயார். பஞ்சவர்ண புஷ்பங்களால் தொடுக்கப்பட்ட வைஜெயந்தி எனும் மாலை, பகவானின் கழுத்திலிருந்து மேனியில் படர்ந்து அசைந்தாடியது. பச்சைப் பசேலென்று துளசி மாலையின் சுகந்தமும் மார்புச் சந்தனம் பரப்பிய நறுமணமும் அந்தப் பகுதியையே கமழ வைத்தன. கழுத்தில் தொங்கும் கௌஸ்துபம் என்ற சிறு மணியும் தோள் வளையங்களும் திண்மையான புஜங்களிலே கங்கணங்களும் கம்பீரத்தை கூட்டின. நீண்ட விரல்களுக்கு மெருகூட்டின மோதிரங்கள். சுருண்ட கேசங்கள் தோளில் புரள, பிரகாசமான முகத்தையும் அங்கும் இங்கும் அலையும் தாமரை போன்ற கண்களையும் அவை பொழி

ஊனுக்கு ஊனிட்ட வேடவன்

Image
கூசாது வேடன் உமிழ் தரு நீராடி ஊன் உண் எனும் உரை கூறா மன் ஈய அவன் நுகர் தரு சேடம் கோதாமெனாமல் அமுது செய் வேதாகம் ஆதி முதல் தரு கோலோக நாத குறமகள் பெருமாளே’  (ஆசார ஈனன் அறிவிலி - திருப்புகழ்) அருணகிரிநாதர், ஆசார ஈனன் என்று தொடங்கும் திருப்புகழ் பாடலின் மேற்கண்ட வரிகளில்  சிவபிரானின் திருவிளையாடலைக் கூறிவிட்டு, அவருடைய மகன் முருகனை வணங்குகிறார். கூசாது வேடன் உமிழ்தரு - யார் அந்த வேடன்? எதை, யாருக்காக உமிழ்ந்தான்? திருமுறைப் பாடல்களில்  பல இடங்களில் குறிப்பிட்டிருக்கும் அந்த வேடன் யார்?  பக்தி முற்றிய சிவனடியார்களுக்கு சிவபிரானது உண்மையை நினைக்குந்தோறும், கேட்குந்தோறும், காணுந்தோறும் என்னவாகும்? தன்வசம் அழிதலும், மயிர்க்கால்தோறும் திவலை உண்டாகப் புளகிதமடைதலும், ஆனந்த அருவி பொழிதலும், விம்மலும், நாத்தழுதழுத்தலும், உரை தடுமாறலும், ஆடுதலும், பாடுதலும், அந்தச் சிவன் உவப்பன செய்தலும், அவன் வெறுப்பன ஒழித்தலும், இவைபோன்ற பிறவும் காணப்படும். இவ்வாறு அன்பானது  தலையன்பு, இடையன்பு, கடையன்பு என மூவகைப்படும். இத்துணை சிறப்புவாய்ந்த அன்புடைமையிலே சிறந்து விளங்கினார் ஒரு வேடன். அவர்தான் கண்ணப்ப