மூச்சு தந்த பேச்சு


ராவணனின் தம்பி விபீஷணன், தன் அண்ணனின் மோசமான போக்கை சுட்டிக்காட்டினான். அவன் திருந்தாததால், ராமனுடன் சேர நினைத்து அவரைத் தேடி வந்தான். அவனை தங்களுடன் சேர்க்கக்கூடாது என்று சுக்ரீவன் உள்ளிட்ட வானரத்தலைவர்கள் எதிர்த்தனர். 

எதிரியாக இருந்தாலும், தன்னைச் சரண் அடைபவனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது உயிர் மூச்சான கொள்கை. ஆனால் தன் எண்ணத்திற்கு, வானரர்கள் குறுக்கே நிற்பதைக் கண்டு, அவரது மூச்சே நின்று விட்டது. அப்போது ஆஞ்சநேயர் விபீஷணனுக்கு ஆதரவாகப் பேசினார். அவன் நல்லவன் என்று எடுத்துக் கூறினார். அவர் சொன்னதைக் கேட்டவுடன், சுக்ரீவன் உள்ளிட்டவர்கள் அவரது கருத்தை ஏற்று, விபீஷணனை தங்களுடன் சேர்க்க ஒப்புக்கொண்டனர். ராமனுக்கும் அப்போது தான் மூச்சே வந்தது. மூச்சுக்கு தேவை காற்று. ஆஞ்சநேயர் வாயு மைந்தன் அல்லவா! அவர் பேசியதுமே ராமனுக்கு மூச்சு கிடைத்து விட்டது. கடவுளுக்கே உயிர் கொடுத்த கடவுள் அவர். நமக்கு ஏதாவது சிரமம் வந்தால் அனுமனுக்கு பிடித்தமான 'ஸ்ரீராமஜெயம்' என்ற மந்திரத்தை பக்தியோடு சொன்னால் போதும். அது பறந்துவிடும்.

Comments

Popular posts from this blog

ஊனுக்கு ஊனிட்ட வேடவன்

ஆதவனால் கிடைத்த அன்பு மகன்

தியாகச் சின்னம் ஊர்மிளா