கடவுளை நினைக்கும் நேரம்


மகாபாரத போரில் வெற்றி பெற்ற தர்மர் பட்டம் சூட்டிக்கொண்டார். பாண்டவர்களின் தாயான குந்தியிடம் விடைபெற கிருஷ்ணர் வந்தார்.
குந்தி அவரிடம் ''எங்களை விட்டுச் செல்கிறாயே! இனி உன்னை காணும் பாக்கியம் இல்லாமல் போய் விடுமே'' என வருந்தினாள்.
''கவலை வேண்டாம். விரும்பும் வரம் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்'' என்றார் கிருஷ்ணர்.
அதற்கு குந்தி ''கிருஷ்ணா! தினமும் வாழ்வில் சிறு துன்பமாவது நேரும் வரம் கொடு'' என்றாள்.
''எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும் என்று தானே கேட்பார்கள். நீங்கள் மாறாக கேட்கிறீர்களே!'' என்றார் கிருஷ்ணர்.
''கிருஷ்ணா! இன்பம் வந்தால் கடவுளின் நினைவு வருவதில்லை. துன்பப்படும் போது தான் வருகிறது. உன்னை தினமும் நினைக்க வேண்டும் என்பதால் இப்படி கேட்டேன்'' என்றாள் குந்தி

Comments

Popular posts from this blog

ஊனுக்கு ஊனிட்ட வேடவன்

ஆதவனால் கிடைத்த அன்பு மகன்

தியாகச் சின்னம் ஊர்மிளா